பைக்கிலிருந்து விழுந்த வாலிபர் படுகாயம்

Date: 2015-02-02 11:52:44

கடையம், : கடையநல்லூரைச் சேர்ந்த பீர்பக்கீர் மகன் அப்துல்காதர் (35). இவர் பொட்டல்புதூரில் நடந்த கந்தூரி விழாவை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் இரவு பைக்கில் வந் தார். நள்ளிரவில் விழா முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தென்காசிரோட்டில் செட்டிமடம் அருகே பாலத்தில் சென்ற போது திடீரென பைக்கிலிருந்து தவறி விழுந் தார்.

படுகாயமடைந்து மயங்கி கிடந்த அவரை நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


Like Us on Facebook Dinkaran Daily News