சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

Date: 2015-02-02 11:52:36

சங்கரன்கோவில், : சங்கரன்கோவில் அருகே முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மகேந்திரன் (25). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று காலை நெல்கட்டும்செவல் கிராமத்திற்கு சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவி லுக்கு சென்றார். ஆட்டோ மீது வெள்ளரிக்காய் சாக்கு மூட்டைகள் அதிகளவு லோடு ஏற்றப்பட்டிருந்தது. எட்டு பயணிகளுடனும், வெள்ளரிக்காய் மூட்டைகளுடனும் ஆட்டோ தடுமாறியபடியே சென்றது. ஆட்டோ அச்சம்பட்டி அருகே வந்த போது திடீரென சாலையில் கவிழ்ந்து, சாலையோர பள்ளத்திற்குள் உருண்டது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் ஆட்டோவை தூக்கி நிறுத்தி, உள்ளே சிக்கி இருந்தவர் களை மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர்.

இந்த விபத்தில் டிரைவர் மகேந்திரன் மற்றும் நெல்கட்டும்செவலை சேர்ந்த கல்யாணதாய் (40), வேல்ச்சாமி மகன் சின்னராசு (15), தமிழ்செல்வன் மனைவி துரைச்சி (35), சமுத்திரபாண்டி மனைவி முத்தம்மாள் (50), பூசத்துரை (60), கண்டிகைப்பேரியை சேர்ந்த முத்து (70) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.இதில் துரைச்சி, முத்து, பூசைத்துரை ஆகி யோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures

Like Us on Facebook Dinkaran Daily News