கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Date: 2015-02-02 11:52:32

புளியங்குடி, : புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (54). இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள் ளன. இந்நிலையில், இவர் புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதாக போலீ சுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தங்கராஜை கைது செய்து இரண்டே முக்கால் கிலோ கஞ்சாவும், ரூ.3 ஆயிரமும் பறிமுதல் செய்தனர்.

தங்கராஜை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க புளியங்குடி டிஎஸ்பி வானமாமலை, இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆலோசனையின் பேரில் நெல்லை கலெக்டர் கருணாகரனுக்கு எஸ்பி நரேந்திரன் நாயர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று தங்கராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் பாளை மத்திய சிறையிலிருக்கும் அவரிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவலை இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தெரிவித்து, அதற்கான கலெக்டரின் உத்தரவு நகலையும் வழங்கினார்.how to prevent aids cdc hiv symptoms hiv lesions pictures

Like Us on Facebook Dinkaran Daily News