Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

திருச்சியை சர்வதேச மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்ற முயற்சி

பதிவு செய்த நேரம்:2013-12-23 10:53:47
MORE VIDEOS

திருச்சி,: திருச்சியை சர்வதேச மருத்துவ சுற்றுலா நகரமாக மாற்றும் வகையில், சுகாதார பாதுகாப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லப்படும் என அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
திருச்சி-தஞ்சை சாலை பால்பண்ணை அருகே உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று மருத்துவ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
அப்போலோ திருச்சிக்கான திட்டம் 2011 பிப்ரவரியில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் நிறைவுற்று 2013 நவம்பர் மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள திருச்சி மருத்துவமனை பல்வேறு மருத்துவ துறைகளில் ஹை-எண்ட் பாதுகாப்பை வழங்கும். இந்த மருத்துவமனையில் 1,75,000 சதுர அடியில் 225 படுக்கை வசதியுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உள்ளது. நவீன தொழில்நுட்பம், சர்வதேச பயிற்சி பெற்ற டாக்டர்கள், அல்ட்ரா மாடர்ன் லேபரட்டரி வசதியுடன் இயங்கி வருகிறது. துளையில்லா இதய சோதனை மற்றும் துளையிடலுக்கான நடைமுறைகளுக்கான மேம்பட்ட கேத்லாப் இரண்டுக்கும் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. 5 உள்நாட்டு தொழில்நுட்ப ஆபரேசன் தியேட்டர்கள், வயர்லெஸ் வசதியுடன் கூடிய 5ஆம்புலன்ஸ்கள், முழு நேர எமர்ஜென்சி மற் றும் விபத்து மையம் உள் ளது. தனி எம்ஐசியு, சிடிசியு, சிசியுவுடன் 32 கிரிட்டிகல் கேர் பெட்கள், ஹை டிப்டென்சி ஸ்டெப் டவுன் யூனிட்டுடன் நியூரோ ஐசியு, கோல்டன் ஹவர் சமயத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேர அப்போலோ நெஞ்சுவலி கிளினிக் ஆகியவை உள்ளது. திருச்சியில் துவங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில் இதுவரை நோயாளிகளின் சேர்க்கை 62 சதவீதம் உள்ளது. இங்கு சிஓபிஜி உள்ளிட்ட 50 கார்டியோவாஸ்குலர் அறுவை சிகிச்சைகள், 200ஆஞ்சியோ கிராபி மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக், 25 மூளை கட்டிகள் உள்ளடக்கிய நியூரோ சர்ஜரி, முதுகு, பாலிடிராவுமா அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரிய பரிந்துரைப்படி, தரமான நிர்வாக முறை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளதால், சர்வதேச மருத்துவ சுற் றுலா பயணிகளுக்கான, அடுத்த பெரிய மையமாக திருச்சி நகரம் திகழும். 1983ல் சென்னையில் அப்போலோ மருத்துவமனை கார்ப்பரேட் மருத்துவமனையாக துவங்கப்பட்டது. தற்போது 61 மருத்துவமனைகள், 1,517 மெடிக்கல், 102 டயக்கோஸ்டிக் கிளினிக்குகள் உள்ளது. மேலும் மருத்துவ இன்சூரன்ஸ் சேவைகள், ஹெல்த்கேர் ஐடி சேவைகள், தொற்றுநோய் ஆய்வுகள், செல் ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 8 நர்சிங் கல்லூரிகள், 3 நர்சிங் பள்ளிகள், 2 மேலாண்மை கல்வி நிலையம், 1 பிசியோதெரபி கல்லூரி, 15 பாராமெடிக்கல் புரோகிராம்கள் ஆகியவையும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின்போது, மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் சத்திய நாராயண ரெட்டி, டாக்டர்கள் ரோகிணி ஸ்ரீதர், பிரேமா குமார், சத்யபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சட்டம் உன் கையில்!இந்தியா, ஆங்கில ஆதிக்கத்தி லிருந்து அறவழியில் சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் தனி சுதந்திர நாடாக செயல்பட, அரசியல் அமைப்பு சாசனம் இயற்றுவது ...

வீட்டின் உள் அலங்காரத்துக்காக மீன் வளர்க்க விரும்புகிறேன். என்னென்ன மீன்கள் எப்படி வளர்க்கலாம்? மீன் தொட்டியின் அளவைப் பொறுத்தே வண்ண மீன்கள் வளர்ப்பதைத் தீர்மானிக்க முடியும். ...

Advertisement

சற்று முன்

Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சிந்தனை
நம்பிக்கை
எதிர்ப்பு
கவலை
சேமிப்பு
சாதனை
சுறுசுறுப்பு
சலனம்
வெற்றி
வருமானம்
செல்வாக்கு
புது வாய்ப்பு
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran