Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

மணப்பெண் தேவை என விளம்பரம் செய்த 60 வயது முதியவரை அழைத்து அடித்து உதைத்து நகை பறிப்பு

பதிவு செய்த நேரம்:2013-04-25 10:37:37
MORE VIDEOS

ஆவடி: இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் செய்த ஓய்வு பெற்ற பேராசிரியரை அழைத்து அடித்து உதைத்து 5 சவரன் நகையை பறித்த இளம்பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
குரோம்பேட்டை சாந்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் தங்கரத்தினம் (60). ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. தன்னை கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம் 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக, கடந்த செப்டம்பரில் நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேவை என தனது தொலைபேசி எண்ணுடன் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரத்தை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு 25 வயது ஆகிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அம்பத்தூருக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
இளம்பெண் அழைப்பை ஏற்று, தங்கரத்தினம் அம்பத்தூர் ரயில் நிலையம் வந்தார். அங்கு அந்த பெண்ணும் வந்தார். பிறகு ஒரு ஆட்டோவில் தங்கரத்தினத்தை கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரும், அவரது கணவன் மற்றும் 2 பேரும் சேர்ந்து தங்கரத்தினத்தை இந்த வயதில் உனக்கு 2வது திருமணம் கேட்கிறதா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு பட்டரவாக்கம் ரயில் நிலையம் அழைத்துச்சென்று விட்டுவிட்டு, யாரிடமாவது இதை தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தங்கரத்தினம் புகார் செய்தார். அம்பத்தூர் போலீசார் விசாரிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ பாஸ்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், தங்கரத்தினத்தை தாக்கி நகையை பறித்தது அயனாவரம் பாலக்கார தெருவை சேர்ந்த நிக்கோலா (25), அவரது கணவன் வில்லியம் (29), வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரேகா (48), அனகாபுத்தூர் காமாட்சி நகரை சேர்ந்த முத்துக்குமார் (27) ஆகியோர் என தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சிறப்புப் பேட்டி மியூஸிக் சீசன் தொடங்கிவிட்டது. சபாக்களில் கூட்டம் அலைமோதும். அதுவும் நித்யஸ்ரீ பாடும் அரங்கினுள் நிற்கக்கூட இடமிருக்காது. அந்தளவுக்கு  ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கும் கர்நாடக ...

இனிய இல்லம்: தமிழினிதோட்டமென்பது இயற்கைத் தூரிகையால் வரையப்பட்ட லாண்ட்ஸ்கேப்பிங் ஓவியமே! - வில்லியம் கென்ட்‘‘சார்... நல்லாயிருக்குறீங்களா? நம்ம செடிகள்லாம் எப்படி இருக்குதுங்க? நல்லா கவனிச்சிக்கோங்க சார்...’’ ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement
Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

19

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ஜெயம்
ஆதாயம்
உயர்வு
அமைதி
சுகம்
வரவு
லாபம்
கவனம்
தேர்ச்சி
தெளிவு
பொறுமை
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran