பள்ளியில் ஆய்வு வழி அறிவியல் கண்காட்சி
பதிவு செய்த நேரம்:2013-03-16 12:18:12திருவெறும்பூர், : திருவெறும்பூர் வட்டார வள மையம் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் ஆய்வு வழியில் அறி வியல் கண்காட்சி நடைபெற்றது.
திருவெறும்பூர் வட் டார வள மைய மேற்பார்வையாளர் எஸ்.எஸ்தர் தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பிரேம்குமார், புகழேந்தி, அறி வியல் தொட க்கக் கல்வி உதவி அலுவலர் லதா, ஆசிரியர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ, மாணவி களின் படைப்புகளை பார்வையிட்டனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய பயிற்று ஆசிரியர் கள் ராதிகா, காளிராஜ், அன்பழகன் செய்திருந்த னர். கண்காட்சியில் மாணவர்கள் படைத்திருந்த 30க்கு மேற்பட்ட ஆய்வக படைப்புகள் இடம்பெற்றன. பல்வேறு பள்ளியிருந்து வந்திருந்த மாணவர்கள் பார்வையிட்டனர்.










