18 முதல் 31ம் தேதி வரை ஆதார் கார்டுக்கு மீண்டும் புகைப்படம் வார்டுகள் விவரம் அறிவிப்பு
பதிவு செய்த நேரம்:2013-03-16 12:18:05திருச்சி, : தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க 18ம் தேதி முதல் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியில் தேசிய அடையாள அட் டைக்கு (ஆதார்) புகைப்படம், கைவிரல் ரேகை மற் றும் கண் கருவிழி படலம் பதிவு செய்யும் பணி கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் இம்மாதம் 10ம் தேதி வரை முதற்கட்டமாக அனைத்து வார்டுகளிலும் நடந்தது. அதில் 68 சதவீதம் பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். விடுப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை புகைப்படம் எடுக்கப்பட உள்ளது.
அதன்படி 1,2,3,4,5,6 ஆகிய வார்டுகளுக்கு ஸ்ரீரங் கம் கோட்ட அலுவலகத்திலும், 8,9,10,11,12,13,16, 17,18 வார்டுகளுக்கு மேலிப்புலிவார்டு ரோட்டிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தி லும், 22,23,24,25,26,33 வார்டுகளுக்கு அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.
அதேபோல் 14,15,19, 20,21 வார்டுகளுக்கு கீழ ரண் சாலையிலுள்ள மது ரம் தொடக்கப்பள்ளி, 7,28,29 வார்டுகளுக்கு அரியமங்கலத்திலுள்ள இள நிலை பொறியாளர் அலுவலகம், 44,46,47,48 ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி மைய அலுவலகம், 30,31, 32,36 ஆகிய வார்டுகளுக்கு புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 35,37, 38,42 ஆகிய வார்டுகளுக்கு கே.கே.நகரிலுள்ள மாநகராட்சி பள்ளி, 39வது வார் டுக்கு பஞ்சப்பூரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 33,43 வார்டுகளுக்கு செங்குளம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யில் நடைபெறுகிறது.
40,41வது வார்டுகளுக்கு எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 45வது வார்டுக்கு பொன்னகர் நர்சரி பள்ளி, 52,53வது வார்டுக்கு புத்தூரிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி, 54,55,56 ஆகிய வார்டுகளுக்கு உறையூர் குறத்தெருவிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 57வது வார்டுக்கு உறையூர் சாலைரோட்டிலுள்ள சத்துணவு மையம், 58, 60வது வார்டுக்கு உறையூர் டாக்கர் ரோடு ஆல்செயின்ட்ஸ் துவக்கப்பள்ளி, 59வது வார்டுக்கு உறையூர் வாலாஜா ரோட்டிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் புகைப்படம் எடுக் கும் பணி நடைபெறுகிறது.
இதுதொடர்பான மேலும் விபரங்கள், சந்தேகங்களுக்கு ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு 76395 11000, 2436300 என்ற எண்களிலும், அரியமங்கலம் கோட்டத்திற்கு 76395 22000, 2462616 என்ற எண்களிலும், பொன்மலை கோட்டத்திற்கு 76395 33000, 2410610 என்ற எண்களிலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்கு 76395 44000, 24771681 என்ற எண் ணிலும் தொடர்பு கொள் ளவும்.
இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் தண்ட பாணி தெரிவித்துள்ளார்.










