Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

முசிறி, தொட்டியம் வட்டாரத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம் 18, 19ம் தேதிகளில் நடக்கிறது

பதிவு செய்த நேரம்:2013-03-16 12:17:59
MORE VIDEOS

தா.பேட்டை, : முசிறி, தொட்டியம் வட்டார கிராமங்களில் உழவர் பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு பிரசாரம் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் முசிறி, தொட்டியம் வட்டார விஏஓ அலுவலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ முஸ்தபா கமால்பாட்ஷா தலைமை வகித்தார். தாசில்தார்கள் முசிறி (பொ) ராஜசேகரன், தொட்டியம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொட்டியம் துணை தாசில்தார் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் ஆர்டிஓ பேசுகையில், உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை, திருமணம், இயற்கை மரணம், விபத்து, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனை அவர்கள் அறியும் வகையில் கிராமங்களில் விஏஓக்கள், ஊராட்சித்தலைவர்கள் செயல்படவேண்டும். வரும் 18, 19 தேதிகளில் முசிறி, தொட்டியம் வட்டார கிராமங்களில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். தொடர்ந்து 20, 21, 22 தேதிகளில் உழவர் பாதுகாப்பு அட்டைகள் வைத்துள்ள விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற வேண்டும் என்றார். மண்டல துணை தாசில்தார் முத்துசாமி நன்றி கூறினார்.
இலங்கைக்கு எதிரான

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement

Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran