ஐ.நா. தீர்மானம் ஆதரிக்க வக்கீல்கள் உண்ணாவிரதம் மணப்பாறையில் நடந்தது
பதிவு செய்த நேரம்:2013-03-16 12:17:55மணப்பாறை, : இலங்கை க்கு எதிரான அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்க வலியுறுத்தி மணப்பாறை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடந்தது.
கோவில்பட்டிரோட்டிலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தன போக்கை கண்டித்தும், ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
பின்னர் பெரியார்சிலை அரு கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட னர். இந்நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலா ளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார், இணைச்செயலாளர் சுதாகர், பொருளாளர் ராஜேந்திரன், நூலகர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வக்கீல்கள் வெள்ளைச் சாமி, முல்லை ஆறுமுகம், ஜான் போஸ்கோ, வினோத்குமார், முரளிகிருஷ்ணன், மோகன்தாஸ், சக்தி வேல், துளசிசேகரன், சிவராமன், கதிரேசன், மோகன்குமார், அருண்பிரசாத், ராஜேஸ்கண்ணன், அய்யனார், மகேந்திரன், மகேஷ், விஜய், சதாசிவம், டேனியல், இளம் பிறை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மதிமுக மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழ்மாணிக் கம், தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ணகோபால், மாவட்ட துணைசெயலாளர் வசந்த் பெரியசாமி, நகர்மன்ற உறுப்பினர் ராஜ்குமார், நகர செய லாளர் கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.










