இரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:47:37மதுரை, : மதுரையில் 40க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிய 4பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சித்திரைச்செல்வம்(35). இவர் தனது டாடா சுமோ காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் வந்த ஒரு கும்பல் டாடா சுமோவை அடித்து சேதப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த 4கார்கள், 3 வேன்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் 40க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து சேதப்படுத்தியது.
இதை அந்த வழியாக சென்ற காமராஜர் சாலையை சேர்ந்த விக்டர்(65) தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த கும்பலில் சிலர் அவரது இடது கையை அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த விக்டர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில், தெப்பக்குளம் போலீசார் காமராஜர் சாலையை சேர்ந்த கண்ணன், பனிரெண்டு, கவியரசு, ராமு ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.










