சூரியன் எப்எம்-மின் பிரபலங்களின் படிக்கட்டுகள் நிகழ்ச்சியில் இன்று நடிகர் தருண்கோபி பங்கேற்கிறார்
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:47:31மதுரை, : சூரியன் எப்எம்-மின்பிரபலங்களின் படிக்கட்டுகள் நிகழ்ச்சியில் இன்று திரைப்பட இயக்குனரும் நடிகருமான தருண்கோபி பங்கேற்கிறார்.
பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற காரணமாக இருந்த அனுபவங்கள் குறித்து அவர்களே நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் -பிரபலங்களின் படிக்கட்டுகள் என்ற மாறுபட்ட நிகழ்ச்சி சூரியன் எப்எம்-மில் சனிக்கிழமை தோறும் இரவு 10 முதல் 11மணி வரை ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த பிரபலங்கள், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள், கலையுலகத்தினர் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மக்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். இன்று, திமிரு, காளை போன்ற படங்களின் இயக்குனரும், மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களின் நாயகனுமான தருண்கோபி பங்கேற்க உள்ளார்.
தனது சொந்த ஊர், உதவி இயக்குனரான விதம், இயக்குனராக பணியாற்றி அனுபவம், நடிகரான விதம், எதிர்கால திட்டம், வெற்றியின் ரகசியம் என தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தனக்கு பிடித்த பாடல்களை நேயர்களுக்கு வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டீபன் தொகுத்து வழங்குகிறார்.










