யாதவா கல்லூரி நிர்வாக சிக்கலுக்கு தீர்வு இரண்டு மாதங்களில் தனி அதிகாரி நியமனம் ஐகோர்ட் உத்தரவு
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:47:24மதுரை, : மதுரை யாதவ கல்லூரியை நிர்வகிக்க 2மாதத்தில் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாதவ கல்லூரி யை, யாதவ கல்வி நிதி சங்கம் நிர்வகித்து வந்தது. கல்வி நிதி சங்க செயலாளர், கல்லூரி தாளாளராகவும் செயலாளராகவும் இருந்து வந்தார். கல்லூரி தாளாள ராக இருந்த சந்திரன் இறப்புக்கு பிறகு, கல்லூரி நிர் வாக பொறுப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டது. ஐகோர்ட் கிளையில் 12 வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:
யாதவ கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பதிவுத் துறை ஐஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கல்லூரியை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என ஐஜி பரிந்துரை செய்துள் ளார். அந்த பரிந்துரையை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் ஒழுக்கம் நிலைநாட்ட வேண்டும். கோஷ்டி மோதலை கட்டுப்படுத்த வேண்டும். சில உறுப்பினர்கள் தகாத செயல்களில் ஈடுபட்டது கண்டிக்கதக்கது.
கல்வி நிதி குழு உறுப்பினர் மெய் யாதவ், நீதிபதிகளுக்கும், சங்கங்களின் பதிவாளருக்கும், கல்லூரி கல்வி துறை இயக்குனருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மிரட்டும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.
சிலர் அதிகாரிகளுக்கு மொட்டை கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இந்த கடிதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவைகள் கோர்ட்டின் கவனத்தை திசை திருப்ப செய்யப்பட்டதாக உள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகத்தை தனி அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும் என பதிவுத்துறை ஐஜி பரிந்துரை செய்ததில் நியாயம் உள்ளது. ஐஜி பரிந்துரையை அரசு 2 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். பதிவுத்துறை ஐஜி அறிக்கையை எதிர்த்து சிவில் கோர்ட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கல்லூரி சுயநிதி கல்வியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் தலையிடக்கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.










