19ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் அடைப்பு
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:47அண்ணாநகர், : இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சார்பில் வரும் 19ம் தேதி கடை அடைப்பு, காலை 10 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட் 5ம் எண் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நேற்று நடந்த அனைத்து வியாபாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மலர், பழம், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட போராட்ட குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.










