• குடைமிளகாய், மிளகு, காளான் துவட்டல்

  6/28/2016 1:56:13 PM Capsicum, Pepper, Mushrooms Tuvattal

  எப்படிச் செய்வது?

  குடைமிளகாயை சுத்தப்படுத்தி நீளமாக வெட்டவும். அதே போல் தக்காளி, வெங்காயம் எல்லாவற்றையும் வெட்டவும். காளானை மேல் தோல் எடுத்து மண்வாசனை போகும்வரை சுத்தமாக கழுவி அதையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காளான் சேர்த்து வதக்கி ....

  மேலும்
 • வெஜிடபிள் கறி

  6/24/2016 2:05:53 PM Vegetable curry

  எப்படிச் செய்வது?

  காய்கறிகளை ஒரே அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து  நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது வதங்கியதும் மஞ்சள், உப்பு, கரம் மசாலா,  மிளகாய், மிளகுத்தூள் ேசர்த்து ....

  மேலும்
 • வெஜ் கீமா மசாலா

  6/21/2016 4:02:48 PM Kima vej spices

  எப்படிச் செய்வது?
       
  வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை சூடான  பாலில் ஊற  வைக்கவும். தக்காளியை அரைத்து  கொள்ளவும். கடாயில்  எண்ணெய் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்  கொள்ளவும். பொடியாக நறுக்கிய ....

  மேலும்
 • சீரக சாதம்

  6/16/2016 3:28:02 PM Jeera Rice

  எப்படிச் செய்வது?

  முதலில் 30 நிமிடங்கள் பாசுமதி அரிசி ஊற வைக்கவும், பின் அதை வடிகட்டி எடுத்து வைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடான பின் சீரகம், பிரிஞ்சி இலை மற்றும் பட்டை சேர்க்கவும். அவை சூடான பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி உப்பு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். ....

  மேலும்
 • கத்தரிக்காய் பச்சடி

  6/11/2016 12:20:44 PM Brinjal Pachadi

  எப்படிச் செய்வது?

  ஒரு பெரிய கத்தரிக்காயை எடுத்து துடைத்து அதன் மேல் சிறிது எண்ணெயை தடவி, எல்லாப் பக்கமும் தோல் கறுக்கும்வரை அடுப்பில்  வைத்துச் சுடவேண்டும். கத்தரிக்காய் சொத்தை இல்லாமல் பார்த்து செய்ய வேண்டும். பின் ஆறியதும் தோலை உரித்து விட்டு, கழுவி  இரண்டாக வெட்டி சுத்தப்படுத்தி மசித்துக் ....

  மேலும்
 • ஹராபாரா கபாப்

  6/7/2016 2:49:16 PM Hara bhara kabab

  எப்படிச் செய்வது?

  உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது. உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ....

  மேலும்
 • பனீர் 65

  6/3/2016 1:47:07 PM Panner 65

  எப்படிச் செய்வது?

  பனீர் துண்டுகளை 1 அங்குலத் துண்டுகளாக வெட்டவும். மைதா, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, இஞ்சி, பூண்டு, சாட் மசாலா, கரம் மசாலா, அரை டீஸ்பூன் மிளகாய் தூள், தனியா தூள், ஃபுட் கலர், முக்கால் டீஸ்பூன் உப்பு, தனியே எடுத்து வைத்த 2 டீஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். ....

  மேலும்
 • பூசணிக்காய் தயிர் பச்சடி

  6/1/2016 3:58:12 PM Pumpkin Curd Pachadi

  எப்படிச் செய்வது?

  சீரகம், பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைக்கும் போது சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம். நறுக்கிய பூசணிக்காயுடன் அரைத்த கலவையை சேர்த்து உப்பு, தயிர் போட்டு கலக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கலவையில் சேர்த்து பரிமாறவும். சாம்பார் சாதம் அல்லது வத்த ....

  மேலும்
 • முள்ளங்கி புரோட்டா

  5/26/2016 4:46:05 PM Radish Parrota

  எப்படிச் செய்வது?

  முள்ளங்கித்துருவலில் இருந்து தண்ணீரை பிழிந்து விடவும். இந்த தண்ணீரை மாவு பிசைய உபயோகிக்கவும். கோதுமை மாவில் உப்பு போட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின் துருவிய ....

  மேலும்
 • பால் பணியாரம்

  5/24/2016 4:02:18 PM Milk pudding

  எப்படிச் செய்வது?

  அரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து 2-3 மணி நேரம் ஒன்றாக அதை ஊற வைத்து, பின்னர் அவற்றை அரைத்து கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். மாவில் எந்த கரடுமுரடான துகள்களும் இருக்க கூடாது. பணியாரம் வறுக்க தேவையான எண்ணெய் ஒரு கடாயில் சூடாக்கி மாவை சிறிய ....

  மேலும்
 • கார மோதகம்

  5/18/2016 3:33:28 PM kara mothakam

  எப்படிச் செய்வது?

  கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய காய்கறிகளை போடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 3-4 நிமிடங்கள் சுருள வதக்கி ஆற விடவும். 1 கப் தண்ணீருடன் ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மாவில் தண்ணீரை வேண்டிய அளவிற்கு சேர்க்கவும். மாவை நன்கு வெண்ணெய் போல் பிசைந்து ....

  மேலும்
 • மிரியாலு பப்பு

  5/13/2016 2:52:52 PM Miriyala Pappu

  எப்படி செய்வது?

  புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், ....

  மேலும்
 • கைமா பராத்தா

  5/11/2016 3:43:04 PM Khaimah Parathas

  எப்படிச் செய்வது?

  சோயாவை கழுவி அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அத்துடன் தூள் வகைகள் ....

  மேலும்
 • அபர்ஜின் பேக்

  5/9/2016 3:42:29 PM Aparjin pack

  எப்படிச் செய்வது?

  கத்தரிக்காயை நீளவாக்கில் 4 துண்டுகளாக்கவும். இதை கடுகு எண்ணெயில் ஊற வைக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதனை கிரில் பேனில் வைத்து பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும். இத்துடன் சீஸ் சேர்க்கவும். வறுத்த எள்ளை மேலே தூவவும். இதை ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News