• கத்தரிக்காய் ஃப்ரை

  10/21/2016 5:04:04 PM brinjal fry

  எப்படிச் செய்வது?

  கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு தாளித்து கத்தரிக்காயை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கி, கறிவேப்பிலை தூவி இறக்கி ....

  மேலும்
 • உருளைக்கிழங்கு மசாலா

  10/17/2016 2:44:18 PM Potato Masala

  எப்படிச் செய்வது?

  உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து ....

  மேலும்
 • கேரட் கறி

  10/8/2016 12:14:44 PM Carrot curry

  எப்படிச் செய்வது?

  கேரட்டை நீளமாக நறுக்கி ஆவியில் லேசாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய், கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, கேரட்டை சேர்த்து வதக்கவும். பின் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கும் நேரத்தில் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கறிவேப்பிலை தூவி இறக்கி ....

  மேலும்
 • அப்பளப் பூ கூட்டு

  10/3/2016 2:41:23 PM appala kootu

  எப்படிச் செய்வது?

  உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். நன்கு கொதி வந்ததும் அப்பளத்தை நொறுக்கி அதில் சேர்த்து இறக்கவும். ....

  மேலும்
 • பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு கரம் மசாலா

  9/30/2016 2:49:45 PM Palakkottai, garam masala potatoes

  எப்படிச் செய்வது?

  பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை ஒன்றாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை வதக்கி, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பலாக்கொட்டை, உருளைக்கிழங்கை ....

  மேலும்
 • வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை

  9/24/2016 12:57:35 PM Ledies finger Pepper Fry

  எப்படிச் செய்வது?

  வெண்டைக்காயை நீளவாக்கில் அரியவும். கடாயில் எண்ணெயை காய விட்டு, கடுகு தாளித்து வெண்டைக்காயை நன்கு வதக்கவும். மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு அரைக்கவும். பிறகு வதங்கிய வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும். நன்கு சுருள வந்தபின் ....

  மேலும்
 • புடலங்காய் கூட்டு

  9/19/2016 12:31:52 PM Snake Gourd Kootu

  எப்படிச் செய்வது?

  கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், சீரகத்தை வறுத்தெடுத்து கொள்ளவும். மிக்சியில் வறுத்த மசாலாவுடன், தேங்காயை சேர்த்து அரைக்கவும். குக்கரில் சிறுபருப்பு, புடலங்காய், பொடியாக நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ....

  மேலும்
 • முருங்கைக்கீரை பொரியல்

  9/6/2016 4:49:38 PM murungai keerai poriyal

  எப்படிச் செய்வது?

  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடித்த மிளகாய்வற்றல் சேர்த்து தாளித்து இத்துடன் கீரையை சேர்த்து வேக விடவும். உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு தேங்காய்துருவலையும் சேர்த்து இறக்கி படைத்து பரிமாறவும். கூழுக்கு ஏற்ற சைட் டிஷ் ....

  மேலும்
 • மஷ்ரூம் கூட்டு

  8/30/2016 2:12:48 PM Mushroom koottu

  எப்படிச் செய்வது?

  ஒரு கடாயில் எண்ணெய் + நெய்யை ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி சேர்க்க வேண்டிய தூள் வகைகளை சேர்த்து எண்ணெயிலேயே சிறு தீயில் வைத்து வேகவைத்து ....

  மேலும்
 • வாழைக்காய் புட்டு

  8/24/2016 3:12:14 PM Plantain Puttu

  எப்படிச் செய்வது?

  வாழைக்காயில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வேகவைத்து உதிர்த்து கொள்ளவும். அதில் உப்பு, சீரகத் தூள், பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது போட்டு தாளிக்கவும். பிறகு தக்காளி, மிளகாய் தூளை ....

  மேலும்
 • கோவக்காய் பொறியல்

  8/19/2016 3:23:58 PM Kovakkay poriyal

  எப்படிச் செய்வது?

  கோவக்காயை எடுத்து சிறிதாக வெட்டி அதில் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்த பின் கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பொன் நிறமாக ....

  மேலும்
 • முருங்கைக்காய் அவியல்

  8/8/2016 3:14:49 PM Drumstick Avial

  எப்படிச் செய்வது?

  முதலில் முருங்கையை வெட்டி வைக்கவும். பின் தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் முதலியவற்றை ஒரு ஜாரில் எடுத்து கொரகொரப்பாக பேஸ்ட் செய்யவும். ஒரு கடாயில் முருங்கைக்காய் எடுத்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மூடி கொண்டு மூடி அவற்றை சமைக்கவும். காய் வெந்த ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News