SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயா பிரியாணி

2020-03-19@ 17:56:15

தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 2 கப்,
சோயா - 15 முதல் 20 (ஊற வைத்துக் கொள்ளவும்),
வெங்காயம் - 2,
தக்காளி - 3,
முந்திரி - 10,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (இடித்து வைத்துக்கொள்ளவும்),
கொத்தமல்லி, புதினா - 1 கப்,
தயிர் -  1/2 கப்,
பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன்,
நெய், எண்ணெய் - 1 கப்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் முந்திரியை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியவுடன் தக்காளி, உப்பு, கொத்தமல்லி, புதினா, தயிர், பிரியாணி மசாலா சேர்த்து வேக வைக்கவும். பின் சோயாவை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கினால் சோயா பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சோயா சில்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: பிரியாணி மசாலா செய்யும் முறையை முன்பக்கத்தில் காண்க.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்