SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி கார இடியாப்பம்

2020-03-11@ 15:16:35

தேவையான பொருட்கள்

ராகி மாவு-1 கப்              
அரிசி மாவு   - 1/2 கப்
தண்ணீர்  - தேவையான அளவு   
உப்பு -      தேவையான அளவு.   
எண்ணெய்-1 மேஜைக்கரண்டி            
கடுகு -      1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு  -   1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -   1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-  சிறிதளவு
வரமிளகாய் -  2    
பெரிய வெங்காயம்  - 1     
சீரகம்  - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1\4  டீஸ்பூன்.


செய்முறை

ராகி மாவு, அரிசி மாவுடன் போதுமான உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு மிக்ஸ் செய்து உருட்டி வைக்கவும். இடியாப்ப அச்சில் லேசாக எண்ணெயைத் தடவி உருட்டிய மாவைப் போட்டு, இடியாப்பமாக இட்லி தட்டின் மேல் பிழிந்து இட்லி பானையில் வேக வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், நறுக்கிய வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து, வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து தாளிப்பு கலவையுடன் நன்கு மிக்ஸ் செய்யவும்.

குறிப்பு: பாக்கெட்டில் விற்கும் ராகி மாவை தவிர்த்து, முழு ராகியை கழுவிச் சுத்தம் செய்து காய வைத்து மாவாக அரைத்து பயன்படுத்தவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்