SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஞ்சி குழம்பு

2020-03-09@ 12:52:46

தேவையானவை

துவரம் பருப்பு    - 2 ஸ்பூன்
கடுகு    - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பல்லாரி    - 3
பூண்டு    - 20 பல்
இஞ்சி    -    25 கிராம்
வறுத்த வெந்தயம் - 1 ஸ்பூன்
பெருங்காயம்    - சிறிதளவு
கறிவேப்பிலை    - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி    - சிறிதளவு


செய்முறை

முதலில் தோல் நீக்கிய இஞ்சி, பல்லாரி, பூண்டு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணைய் விட்டு கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, துவரம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் மஞ்சள் பொடி சேர்க்கவும். இத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, சாம்பார் பொடி, பெருங்காய பொடி, புளி கரைத்த தண்ணீர், வறுத்த வெந்தயப்பொடியை சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மணமுள்ள, மருத்துவ குணமுடைய இஞ்சி குழம்பு ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்