SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவக்காய் ஊறுகாய்

2020-02-25@ 17:58:21

தேவையான பொருட்கள்

ஓட்டுடன் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 1 படி,
உப்பு - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 100 கிராம்,
வெந்தய தூள் - 50 கிராம்,
கடுகு தூள் - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 50 கிராம்,
நல்லெண்ணெய் - 500 கிராம்,
இஞ்சி - 50 கிராம்,
பூண்டு - 50 கிராம்,
சிகப்பு கொண்டைக்கடலை - 50 கிராம்.


செய்முறை

இஞ்சி, பூண்டு தோலுரித்து,  பேஸ்ட் ஆக மிக்சியில் நீர் விடாமல் அரைக்கவும். மாங்காய் துண்டுகளை ஈரம் துடைத்து கனமான பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், வெந்தய தூள், பெருங்காயத்தூள், கடுகு தூள் போட்டு பிசறிக்கொள்ளவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, கொண்டைக்கடலை சேர்த்து ஜாடியில் போட்டு, நல்லெண்ணெய் விட்டு குலுக்கி வைக்கவும். ஜாடியை ஈரம் படாமல் மூடி வைக்கவும்.  3 நாட்கள் கழித்து கரண்டி காம்பால் கிளறி விடவும். இது பச்சைக் கலவை.  ஊறுகாய் மேல் எப்பொழுதும் 1 இஞ்ச் எண்ணெய் மிதக்க விடவும். (கொண்டைக்கடலையை ஊற வைக்கக் கூடாது. இஞ்சி, பூண்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்) இது ஆந்திரா ஆவக்காய்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்