SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குதிரைவாலி தேங்காய்ப்பால் சாதம்

2020-02-13@ 17:34:52

தேவையான பொருட்கள்

குதிரை வாலி அரிசி-1 கப்               
பெரிய வெங்காயம்  -  1     
பச்சை மிளகாய் - 2    
இஞ்சி விழுது  -  1/2 டீஸ்பூன்
மல்லித்தழை  - சிறிதளவு
தண்ணீர் - 1 கப்
கறிவேப்பிலை   - சிறிதளவு
தேங்காய்ப்பால்  - 1 கப்
முந்திரி -  3     
எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
 உப்பு - தேவையான அளவு.
தாளிக்க கடுகு -  1\4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு  - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை   
சீரகம்   -   1/2 டீஸ்பூன்.


செய்முறை

குக்கரில் சுமார் 1/2 மேஜைக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய குதிரைவாலி அரிசியை சேர்த்து குறைவானத் தீயில் அரிசி உடையாமல் வதக்கவும். கூடவே நறுக்கிய மல்லித்தழை, இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து 2 விசில் விட்டு இறக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் சேர்த்து சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், சிறு துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலையை தாளித்து சாதத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்