SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருப்பு மிக்ஸ் கீரை பேன் கேக்

2020-02-03@ 14:20:13

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு-200 கிராம்              
உப்பு -தேவையான அளவு   
பசலைக்கீரை - 1/2 கப்
இட்லி மாவு -1\4  கப்    
சீரகம் -    1 டீஸ்பூன்
எண்ணெய் -   தேவையான அளவு   
பச்சை மிளகாய் -  1-2    
துருவிய கேரட்   -   2 மேஜைக்கரண்டி     
நறுக்கிய மல்லித்தழை -  சிறிதளவு.


செய்முறை

தண்ணீரில் சுமார் 3 மணி நேரம் ஊற வைத்த பாசிப்பயிரை நன்கு மைய அரைக்கவும். நறுக்கிய பசலைக்கீரை, பச்சை மிளகாய், மல்லித்தழையை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை பாசிப்பயறு மாவில் சேர்க்கவும். இதனுடன் இட்லி மாவு, சீரகம், துருவிய கேரட், உப்பைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். தயாரான மாவை மிதமானச் சூடு செய்த கல்லில் பேன் கேக்கினை சுடவும். போதுமான எண்ணெயைச் சேர்த்து பேன் கேக்கை இருபுறமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான பருப்பு மிக்ஸ் கீரை பேன் கேக் தயார். சுவையான தக்காளி
சட்னியுடன் பேக் செய்யவும்.

குறிப்பு

* கூடுமானவரை குழந்தைகளுக்குத் தயார் செய்யும் உணவில் பேக்கிங் சோடா, பேக்கிங் உப்பைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். பேன் கேக் சாஃப்டாக இருக்க சிறிது வெண்ணெயை உறுக்கி மாவில் சேர்த்தால் போதும். *  குழந்தைகளுக்குப் பிடித்த காய்கறிகளைச் சேர்த்து பேன்கேக் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்