SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பட்டி அல்வா

2020-01-21@ 16:11:19

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 200 கிராம்,
கருப்பட்டி - 175 கிராம்,
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 30 கிராம்,
பாதாம் - 20 கிராம்,
பிஸ்தா - 20 கிராம்,
நெய் - 100 கிராம்,
தண்ணீர் - 200 மி.லி.,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் ஆறவிடவும். ஆறிய பின் 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும். ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்