SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிஸ்பி ஃபிரைட் கிராப் கிளா வித் சாம்பல் சால்சா

2020-01-20@ 17:15:22

தேவையானவை :

நண்டு கால் - 4
நறுக்கிய இறால் - 50 கிராம்
நண்டு இறைச்சி - 60 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி - 2 கிராம்
முட்டை - 1
பிரெட்தூள் - 40 கிராம்
உப்பு - 2 கிராம்
பிராத் பவுடர்- 2 கிராம்
சாம்பல் சாஸ் - 30 மிலி
நறுக்கிய அன்னாசி பழம் - 10 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 5 கிராம்
நறுக்கிய தக்காளி - 5 கிராம்
எலுமிச்சை சாறு - 2 மிலி


செய்முறை :

நண்டின் காலை நன்றாக கழுவிக் கொள்ளவும். அதனை சுற்றி நறுக்கிய இறால் மற்றும் நண்டு இறைச்சியை வைக்கவும். முட்டையை அடித்துக் கொள்ளவும். பிறகு நண்டு காலை முட்டையில் முக்கி பிராத் பவுடர் மற்றும் பிரெட்தூளில் பிரட்டி எண்ணெய்யில் பொரிக்கவும். ஒரு பாத்திரத்தில் சாம்பல் சாஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், அன்னாசி பழம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிரட்டவும். பிறகு இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொண்டால் சாம்பல் சால்சா ரெடி. பாரித்து வைத்துள்ள நண்டு கால்களை இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்