SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரிஸ்பி ஸ்க்விட் வித் பட்டர் அண்ட் கறி லீப்ஸ்

2020-01-20@ 17:14:39

தேவையானவை
:
ஸ்க்விட் - 200 கிராம்
உப்பு - 2 கிராம்
கார்ன்ஃபிளவர் - 20 கிராம்
மைதா - 20 கிராம்
முட்டை - 1
வெண்ணெய் - 20 கிராம்
கறிவேப்பிலை - 1 கிராம்
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம்
வறுத்த பூண்டு - 5 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 கிராம்
மிளகு - 1 கிராம்
மிளகாய் பேஸ்ட் - 10 கிராம்
வினிகர் - 10 மிலி
கொத்தமல்லி தழை - 2 கிராம்


செய்முறை :

ஸ்க்விட்டை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டிக்கொள்ளவும். முட்டையை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா, கார்ன் ஃபிளவர் மாவினை ஒன்றாக கலந்துக் கொள்ளவும். முட்டைக் கலவை மற்றும் வினிகரில் ஸ்க்விட்டை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து ஸ்க்விட்டை மாவு கலவையில் பிரட்டி எண்ணெய்யில் வறுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் வெண்ணை சேர்த்து அதில் கறுவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பொரித்து வைத்துள்ள ஸ்க்விட்டை சேர்த்து நன்கு பிரட்டவும். கடைசியில் வறுத்துள்ள பூண்டு மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து சூடாக பறிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்