SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் மசாலா

2020-01-08@ 16:47:19

தேவையானவை

இறால் - 1/2 கிலோ
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 1/2 ஸ்பூன்
சோம்பு, கசகசா - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி -  அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 7
எண்ணெய் - 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை

இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும். பின்பு சின்ன வெங்காயத்தை உரித்து மெலிதாக நறுக்கவும். கழுவிய இறாலுடன், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி, 7 சின்ன வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பிசறிய இறாலைப் போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய பின், அதில் பாதி வெந்த இறாலையும் போட்டு மிதமான தீயில் வதக்கவும். 10 நிமிடம் கழிந்தபின் இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து போட்டு இறக்கவும். பின்பு பரிமாறவும். சுவையான இறால் மசாலா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்