SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளிச்ச கீரை துவையல்

2020-01-08@ 16:44:57

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்து ஆய்ந்த புளிச்ச கீரை - 1 கட்டு
காய்ந்த மிளகாய் - 20,
தனியா - 1 ஸ்பூன்,
வெந்தயம், கடுகு - 1 ஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - 1 துண்டு,
வெங்காயம் - 1 (அரிந்தது),
பூண்டு - 20 பல் (உரித்தது),
புளி - சிறிதளவு,
எண்ணெய் - 150 கிராம்,
கடுகு - தாளிக்க.


செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், கடுகு, பெருங்காயம் இவைகளை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, கீரை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். முதலில் வறுத்த கலவையை மிக்சியில் கரகரப்பாய் அரைக்கவும். (தனியாக எடுத்து வைக்கவும்) பின்னர் கீரை வதக்கிய கலவையை  மிக்சியில் நைசாக அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, இரு கலவைகளையும் நன்கு வதக்கவும். பின்னர் கடுகு தாளிக்கவும். சுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இதனை பத்திரப்படுத்தி வைத்தால் 1 மாதம் வரை கெடாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்