SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெமன் வேர்க்கடலை ரைஸ்

2020-01-07@ 15:55:46

தேவையான பொருட்கள்

வடித்த சாதம்-200 கிராம்           
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2    
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை  - 50 கிராம்  
உப்பு -  தேவையான அளவு   
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய மல்லித்தழை  - சிறிதளவு
பெரிய வெங்காயம்  - 1     
எண்ணெய் -3 டீஸ்பூன்
கடுகு - 1\4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு  -  1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை   
மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்.


செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். கூடவே நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து வதக்கவும். கூடவே எலுமிச்சை சாற்றைச் சேர்த்து வடித்த சாதத்தை உதிரியாக்கி, கலவையுடன் சேர்த்து  உப்பு போட்டு மிக்ஸ் செய்யவும். சுவையான லெமன் வேர்க்கடலை ரைஸ் தயார்.

குறிப்பு

* வேர்க்கடலையை பொடித்தும் சேர்க்கலாம். * மாங்காய், நார்த்தங்காய், கொள்ளு, மொச்சையிலும் செய்யலாம். * வெரைட்டி ரைஸ் செய்யும்போது வேக வைத்த அரிசி உதிரியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் சாப்பிடச் சுவையாக இருக்கும். சுமார் 1 கப் அரிசியை ஊற வைத்துப் பயன்படுத்தினால் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும். ஊற வைக்காமல் சமைத்தால் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். வடித்த சாதத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்