SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைக்காய் கறி

2020-01-07@ 15:53:39

தேவையானவை

வாழைக்காய் - 2
பல்லாரி - 1
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் தூள் - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து, பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கவும். பல்லாரி, தக்காளியை சின்னதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு,சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய பல்லாரியை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். பின்னர் மிதமான தீயில் 5 நிமிடம் வேக விட்டு இறக்கவும். சாம்பார், ரசம் சாதத்துக்கு ஏற்ற வாழைக்காய் கறி ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்