SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சக்கரா உப்பேரி

2019-12-17@ 15:54:55

இந்த சக்கரா உப்பேரி அல்லது சக்கார வரதி பொதுவாக ஓணம் சத்யாவில் பரிமாறப்படுகிறது.

தேவை:

4 பெரிய வாழைக்காய்,  
3/4 கப் வெல்லம் / வெல்லத்தூள்,
1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்,
1/4 டீஸ்பூன் சுக்குத்தூள், தேங்காய் எண்ணெய்

பொரிக்க

தேவையான அளவு, 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்.


செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும். வாணலியில் எண்ணையை காயவிட்டு வாழைக்காய் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும். வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.

பிறகு, வெல்லக் கரைசலை கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் எல்லா ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரையை தூவலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்