SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு

2019-12-05@ 14:32:39

தேவையான பொருட்கள்
 
பாசிப்பயர் - 100 கிராம்    
முருங்கைக்கீரை - 5 கப்    
முருங்கைப்பூ  - 50 கிராம்
தக்காளி - 2  
பச்சை மிளகாய்  -  3    
சீரகம் - 1 டீஸ்பூன்    
வரக்கொத்துமல்லி - 1 டீஸ்பூன்    
உப்பு - தேவையான அளவு    
சின்ன வெங்காயம் -  100 கிராம்    
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை    
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி    
கடுகு - அரை டீஸ்பூன்    
உளுத்தம்பருப்பு - சிறிதளவு    
கறிவேப்பிலை - தேவையான அளவு    
தண்ணீர் - தேவையான அளவு.


செய்முறை

குக்கரில் போதுமான தண்ணீர் சேர்த்து பாசிப்பயர், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கொத்தமல்லி, சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த பருப்பு, கீரை கலவையை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான சாதத்துடன் கூட்டை சேர்த்து
சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

குறிப்பு : முருங்கைப்பூவை நெய்யில் வதக்கி அதனுடன் வெல்லம் (அ) பொடித்த பனங்கற்கண்டைச் சேர்த்து சாப்பிடலாம். முருங்கை இலையில் கால்சியம், புரதச்சத்து, வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது.  கூடுமானவரை முருங்கைக்கீரையை உணவில்
அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்