SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி பேன் கேக்

2019-12-03@ 12:41:34

தேவையான பொருட்கள்:

ராகி மாவு-200 கிராம்,               
கோதுமை மாவு - 100 கிராம்,  
பால் - 50 மி.லி.,    
கனிந்த வாழைப்பழம் - 1/2,    
எண்ணெய் - தேவையான அளவு,   
டூட்டி ஃப்ரூட்டி   - 1 மேஜைக்கரண்டி,     
தேன் - 1 மேஜைக்கரண்டி,     
பொடித்த பட்டை - 1\4 டீஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வால்நட்  - 2,    
தண்ணீர் - தேவையான அளவு.


செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் நன்கு மசித்து அரைத்த வாழைப்பழத்தைச் சேர்க்கவும். போதுமான தண்ணீர், பால், தேன், பொடித்த பட்டையைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். வெண்ணெயை உருக்கி கரைத்த மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லை சூடு செய்து சுமார் ஒரு கரண்டி மாவைச் சேர்க்கவும். ஊற்றிய மாவை லேசாகப் பரப்பி விடவும். பொடியாக நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி, வால்நட்டை ஊற்றிய மாவின் மேல் சேர்க்கவும். போதுமான எண்ணெயைச் சேர்த்து, இருபுறமும் பேன் கேக்கைத் திருப்பிப் போட்டு, கருகாமல் ப்ரவுன் கலரில் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

* தோசைக்கல் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் சரியாக வரும். * வால்நட் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. * வாழைப்பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்