SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொண்டைக்கடலை சாதம்

2019-11-27@ 14:48:30

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்,
சிறிய கருப்பு கொண்டைக் கடலை - அரை கப்,
தேங்காய்ப் பால் - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத் தூள், கரம் மசாலா -  தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் - தலா 1 டேபிள் ஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப்பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்