SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மட்டன் மசாலா

2019-11-11@ 15:45:56

தேவையான பொருட்கள்:

மட்டன்-1/2 கிலோ,
பல்லாரி-2,
இஞ்சி, பூண்டு விழுது-2 ஸ்பூன்,
தனியாத்தூள்-2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்,
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்.

தாளிக்க:


எண்ணெய்-100 மில்லி,
பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்,
கறிவேப்பிலை-சிறிதளவு,
மிளகாய் வத்தல்-4,
இஞ்சி-சிறு துண்டு,
கொத்தமல்லி தழை -அரை கப்,
புதினா இலை-1/4 கப்,
கரம்மசாலா தூள்-1 ஸ்பூன்,
தேங்காய் விழுது-கால் கப்.


செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்யவும். பொடியாக நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வேக வைத்த மட்டனை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதை சேர்த்து வேக விடவும். பின் கரம் மசாலா தூளை தூவி நன்கு கிளறி இறக்கவும். சுவையான மதுரை மட்டன் மசாலா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்