புதினா சப்பாத்தி
2019-11-11@ 15:44:30

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-2 கப்,
புதினா கீரை-2 கப்,
கொத்தமல்லி-1/2 கப்,
பல்லாரி-1,
பூண்டு-5 பல்,
பச்சை மிளகாய்-4,
சீரகம்-1/2 ஸ்பூன்,
நெய்-தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். புதினாவையும், கொத்துமல்லியையும் நன்றாக அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும். பல்லாரி, பூண்டு, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு சீரகம் போட்டு பொரித்து, பின்னர் பல்லாரி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லியை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு மணி நேரம் ஊற வைத்த மாவை தேவையான சப்பாத்தி அளவில் உருட்டிக் கொள்ளவும். ஒரு சப்பாத்தி மீது வதக்கி வைத்துள்ள புதினா கலவையைப் தேவையான அளவு இட்டு அதன் மீது மற்றொரு சப்பாத்தி வைத்து முனைகளில் ஒட்டவும். மீண்டும் இதனை லேசாக உருட்டிக் கொள்ளவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்தியை போட்டு எடுக்கவும். சத்தான புதினா சப்பாத்தி ரெடி.
Tags:
புதினா சப்பாத்திமேலும் செய்திகள்
மாங்காய் மசாலா பப்பட்
மாங்காய் மசாலா சாதம்
சப்பாத்தி சில்லி
பாலக் ரைஸ்
நாசி கொரெங் கம்பங்க்
லாம்ப் ரெட்டாங்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி