SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தயக்கீரை சாதம்

2019-11-07@ 15:40:27

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்,
வெந்தயக்கீரை - 2 கட்டு,
தக்காளி - 3,
வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 4,
மிளகாய்த் தூள்,
மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்,
சீரகத்தூள், தனியாத்தூள்,
கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை
 
கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்