SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஷ்ரூம் சோயா புலாவ்

2019-11-04@ 16:48:55

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 150 கிராம்
மஷ்ரூம் - 50 கிராம்
சோயா - 50 கிராம்
கேரட் - 25 கிராம்
பல்லாரி - 1
இஞ்சி, பூண்டு
விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 1
வாழைக்காய் - பாதி
அரைக்கீரை - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்
தண்ணீர் - 1/2 டம்ளர்
கடலைப்பருப்பு - 25 கிராம்
பட்டை, ஏலம்,
கிராம்பு - தலா 1


செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியையும், பருப்பையும் களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை வெந்நீரில் நனைத்து பிழிந்து எடுத்து வைக்கவும். மற்ற காய்கறிகளை நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடிக்க விட்டு பல்லாரி சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, கொத்தமல்லி, மஷ்ரூம், சோயா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வாழைக்காய், கேரட், உப்பு சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். பிறகு பாஸ்மதி அரிசி, பருப்பு வகைகளை சேர்த்து தேங்காய்ப்பால் ஒன்றுக்கு, ஒன்றரை பங்கு வீதம் ஊற்றி கொதிக்கவிடவும். குக்கரை மூடும்போது கீரையை பொடியாக அரிந்து சேர்க்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, 5 நிமிடம் அதே சூட்டில் தம்மில் விட்டு இறக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மஷ்ரூம் சோயா புலாவ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்