SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மில்க் மிக்ஸ் பேன் கேக்

2019-10-30@ 14:25:02

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 400 கிராம்,
மைதா - 50 கிராம்,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
நெய் - 300 மி.லி.


எப்படிச் செய்வது?

வெதுவெதுப்பானத் தண்ணீரில் குங்குமப்பூவை கரைத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 300 கிராம் சர்க்கரை, 100 மி.லி. தண்ணீரை சேர்த்து ஒரு கம்பி பாகுபதத்திற்கு காய்ச்சி அதில் குங்குமப்பூ கரைசலை சேர்த்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் பாலை சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். இதனுடன் மைதா, மீதியுள்ள சர்க்கரை சேர்த்து எடுத்து ஊற்றும் பதத்திற்கு மாவைக் கரைக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது பாலைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்பு 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்து, சூடான நான்ஸ்டிக் தவாவில் நெய் விட்டு 1 ஸ்பூன் மாவை ஊற்றி பேன் கேக் போல் பரப்பி விடவும். இருபுறமும் நெய் சேர்த்து பொன்னிறமாக வெந்ததும் எடுத்து நெய்யை வடித்து சர்க்கரைப்பாகில் முக்கி 20 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு: பாலுக்குப் பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாம். மைதாவிற்குப் பதில் கோதுமை மாவைச் சேர்த்தும் பேன் கேக் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்