SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் 65

2019-10-21@ 17:44:22

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
எண்ணெய் - 1/2 லிட்டர்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
சோள மாவு (கான்ப்ளார்) - 1 1/2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை:
 
200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும். இப்போது 65 மசாலாவை தயார் செய்ய, ஒரு பவுலில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு, சோள மாவு 1 1/2 மேசைக்கரண்டி, அரிசி மாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள்  இரண்டு தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.15 நிமிடம் நன்றாக மசாலாவில் காளான் ஊறியதும், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடேனதும், பிசைந்து வைத்துள்ள காளானை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான காளான் 65 தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்