SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரில் சிக்கன்

2019-10-21@ 17:37:42

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ (பெரிய 2 துண்டுகள்)
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு


செய்முறை:
 
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இதனுடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள், சோயா  சாஸ், தயிர், எலுமிச்சை சாறு, முட்டை, உப்பு ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.மைக்ரோ வேவ் ஓவனை 200 டிகிரி c-க்கு ப்ரீ ஹீட் (preheat) பண்ணவும். பின்னர் ஊற வைத்த சிக்கனை எண்ணெய் சிறிது சேர்த்து  மைக்ரோ வேவ் ஓவனில் வைக்கக் கூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி c-யில் 20 நிமிடம் வைக்கவும். பிறகு அதை வெளியே  எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். மிகவும் சுவையான கிரில் சிக்கன் தயார். இதனை மயோனைஸ்  சாஸ்ஸுடன் (mayonnaise sause) பரிமாற சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்