SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உருளைக்கிழங்கு ஆம்லெட்

2019-10-09@ 16:42:20

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 4
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - 2
வெண்ணெய் அல்லது ஆயில் - தேவையான அளவு


செய்முறை:
 
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணெய் சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது  வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான  உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்