SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேர்க்கடலை பக்கோடா

2019-10-08@ 12:17:21

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
பல்லாரி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பெருஞ்சீரகம், மிளகு - தலா அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை

வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். பல்லாரியை மிகவும் பொடியாக நறுக்கவும். மிளகு, பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும். பொட்டுக்கடலை மா வு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, பொடித்த மிளகு, பெருஞ்சீரகம், வதக்கி வைத்திருக்கும் கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிதளவு நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்