SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்

2019-09-30@ 17:42:32

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்,
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10,
சிவப்பு மிளகாய் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.


செய்முறை

கொண்டைக்கடலையை கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஃப்ரஷர் குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு, பெருங்
காயம் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேக விடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து, பின் கொண்டைக் கடலையை அதில் சேர்த்துக் கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கலந்து விடவும். சுண்டல் ஸ்பைஸியாக வேண்டுமென்றால் வெறும் வாணலியில் 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 டீஸ்பூன் மல்லி, 2 மிளகாய் முதலியவற்றை சிறிது வறுத்து அரைத்து தூவ வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்