SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன் குழம்பு

2019-09-24@ 17:49:16

என்னென்ன தேவை?

குழம்பு மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
கீறிய பச்சைமிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனிமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
கொடம்புளி - 2 துண்டுகள்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம், கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

மிக்சியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், சோம்பு, தக்காளி சேர்த்து அரைக்கவும். மண்சட்டியில் நல்லெண்ணெயை காயவைத்து வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு, கழுவிய கொடம் புளியை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கழுவிய மீனை சேர்த்து வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

Tags:

fish gravy

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்