வெஜ் கிரிஸ்பி
2019-09-17@ 17:28:04

என்னென்ன தேவை?
கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், வெங்காயம் - தலா பாதியளவு,
காலிஃப்ளவர் - 1/4 துண்டு,
மஷ்ரூம் - 8,
கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன்,
மைதா - 4 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
செலரி - 2 இன்ச்,
பச்சைமிளகாய் - 2,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது,
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
ரெட் சில்லி பேஸ்ட் - 1½ டீஸ்பூன்,
டொமேட்டோ கெட்சப் - 2½ டேபிள்ஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அனைத்து காய்கறிகளையும் ஒரே அளவில் வெட்டி உப்பு,
தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு 1
டீஸ்பூன் மைதா மற்றும் 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து காய்களை பிரட்டி
வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு,
பெப்பர் சேர்த்து குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தண்ணியாக மாவை கரைத்துக்
கொள்ளவும்.
பிறகு காய்களை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில்
பொறித்தெடுக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய
பச்சைமிளகாய், செலரி, பூண்டு சேர்த்து வதக்கி ரெட் சில்லி பேஸ்ட், டொமேட்டோ
கெட்சப், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து பொரித்த காய்களை சேர்த்து நன்கு
பிரட்டி ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.
Tags:
Veg Crispyமேலும் செய்திகள்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்