SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகத்திக்கீரை சாம்பார்

2019-08-28@ 15:53:27

தேவையான பொருட்கள்

அகத்திக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
புளிக்கரைசல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப.

தாளிக்க

வடகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை.


செய்முறை

பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும். கீரையை நன்கு அலசி நீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்திக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை வெந்தவுடன் பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

சாம்பார் பொடியின் பச்சை வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். இப்போது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார். பொங்கல், சாதம், இட்லிக்கு இந்த சாம்பார் பெஸ்ட் காம்பினேஷன்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜ், சென்னை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்