SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஷ்ரூம் பெப்பர் மசாலா

2019-08-27@ 17:57:19

என்னென்ன தேவை?

மஷ்ரூம் - 1 பாக்கெட்,
வெங்காயம், தக்காளி - தலா 2,
மிளகு - 4 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மஷ்ரூமை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகு, தனியா, தக்காளி சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, மஷ்ரூம் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்