SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முள்ளங்கி சட்னி

2019-08-21@ 15:17:02

தேவையான பொருட்கள்:
 
முள்ளங்கி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தேங்காய் - கால் மூடி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
 
முள்ளங்கியை பொடியாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,  உளுத்தம்பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள். அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்  கொட்டவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்