SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்ரை ஃப்ரூட் குஜியா

2019-08-20@ 17:26:55

தேவையான பொருட்கள்

(மைதா - 250 கிராம்,
ரவை - 1/2 கப்,
சமையல் சோடா - 1 சிட்டிகை மேல் மாவிற்கு),
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
பேரீச்சை துண்டுகள்,
பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை, சாரப்பருப்பு எல்லாம் சேர்த்து - 1 கப்,
துருவிய கொப்பரை - 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய சர்க்கரை இல்லாத கோவா - 1/2 கப்,
ஏலப்பொடி - சிறிது,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,

சர்க்கரை - 1/2 கப்,
நெல் அல்லது எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை

இரண்டு கப் சர்க்கரையை 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிசுபிசுப்பு தன்மை வந்ததும் இறக்கவும். மேல் மாவுக்குக் கொடுத்ததை தேவையான தண்ணீர், சூடான நெய் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் ஆகியவற்றைப் பொடித்து, துருவிய கொப்பரை, துருவிய கோவா, ஏலப்பொடி, குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து ஒரு வாணலியில் வைத்து ஒன்று சேர கிளறி இறக்கவும். இப்பொழுது மேல் மாவிலிருந்து ஒரு பூரிக்கான அளவு மாவை எடுத்து வட்டமாகத் தேய்க்கவும். அதனுள் ஒரு டேபிள் ஸ்பூன் பூரணத்தை வைத்து அரை வட்டமாக மூடி (குஜியாவை) சோமாஸ் மாதிரி வடிவத்துக்குக் கொண்டு வந்து தண்ணீர் தொட்டு சீல் செய்யவும். மாவை ஓரங்களில் முறுக்கியும், சீல் செய்யலாம். மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகை சிறிது சூடுபடுத்தி பொரித்த குஜியாக்களை அதில் மூழ்க வைத்து சிறிது நேரத்துக்குப்பின் எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்