SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வால்நட் பாதாம் மில்க்

2019-08-20@ 17:21:04

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு - 12 எண்ணிக்கை    
ஆறிய பால் - 500 மி.லி.    
வெல்லம் - தேவையான அளவு    
உலர்ந்த அத்திப்பழம் - 5
வால்நட் - 5-7
தேன் - 2 மேஜைக்
கரண்டி.


செய்முறை

பாதாம் பருப்பு, வால்நட் இரண்டையும் முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அத்திப்பழத்தையும் தனியாக ஊறவைத்து விழுதாக அரைக்கவும். அரைத்த அனைத்து விழுதுகளையும் பாலில் சேர்த்து பாதியாகும் வரை சுண்ட காயச்சவும். பிறகு பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, ஆறியதும் பரிமாறவும்.
 
குறிப்பு: ஒமேகா 6, 3 சத்துக்கள் நிறைந்த வால்நட் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கூடவே வைட்டமின் இ, பி மற்றும் புரதச்சத்து இருப்பதால், பெண்களின் மார்பகப் புற்றுநோய், ஆண்களின் புராஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood18

    இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • fire18

    மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

  • light18

    கிறிஸ்துவ பண்டிகை: பாரிஸில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகளின் தொகுப்பு

  • snow18

    சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் வீசிய அதிவேக காற்று: பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

  • 18-11-2019

    18-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்