SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் தொக்கு

2019-08-19@ 17:36:16

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரக தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
 
முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி  வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகை போடுங்கள் கடுகு  வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள். கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக  வதங்கும் வரை கிளறி விடுங்கள்.வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள், மில பொடி, சீரக தூள், ஜீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
 மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு நன்கு வதக்கி, 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். அவ்வளவிதான் அருமையான காளான் தொக்கு தயாராகிவிடும். இந்த காளான் தொக்கு சப்பாத்தி, பூரி, தோசை,இட்லி, சாதம், இடியப்பம் போன்ற  பொருட்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்